பதிவு செய்த நாள்
27
பிப்
2015
12:02
கும்பகோணம்,::கும்பகோணத்தில், இளைய மகாமகத்தையொட்டி, 63 நாயன்மார்கள் ஊர்வலம், நேற்று நடந்தது.கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமகமும், அதற்கு முன், வரும் மகம், இளைய மகாமகமும் கொண்டாடப்படும். கடந்த, 23ம் தேதி சிவாலயங்களில் கொடியேற்றப்பட்டு, தினமும் சுவாமி வீதிவுலா நடைபெற்று வருகிறது. நேற்று, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் உள்ள, 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பின், மேளதாளம் முழங்க, யானை முன்னே செல்ல, 63 நாயன்மார்கள் வீதிவுலா நடைபெற்றது. கோயில் வளாகத்திலிருந்து புறப்பட்டு, தஞ்சை சாலை, நாகேஸ்வரன்கோவில் வடக்கு, கிழக்கு, தெற்குவீதி, ராமசாமிகோயில் சன்னதி வழியாக மீண்டும் கோவில் சன்னதியை வந்தடைந்தது.