சிவன் என்ற சொல்லுக்கு நன்மை என்றும்; சக்தி என்ற சொல்லு<க்கு உண்மை என்றும்; உவமை என்ற சொல்லுக்கு சக்தி பிரணவம் என்றும் பொருள். சிவனுக்கு எண்குணத்தான் என்னும் பெயரும் உண்டு. முக்கண்ணன், அம்பலத்தாடுபவன், நீலகண்டன், சுடலைகாத்தான், அருகன், நெற்றிக்கண்ணன், நீறுபூசியோன், மாறியாடும் பெருமான் ஆகியவையே அந்த எட்டுக் குணங்கள். திருவானைக்காவல் கோயிலின் நான்காவது மதிலு<க்கு நீறிட்டான் மதில் என்று பெயர். அந்த மதில் கட்டப்பட்டபோது சிவபெருமானே சித்தாளாக வந்து அங்கு வேலை செய்யும் ஆட்களுக்கு திருநீறை அள்ளி கூலியாக தந்து வந்தார். அந்தத் திருநீறு அவர்கள் பாடுபட்ட அளவுக்குப் பொன் துகள்களாக மாறியது. திருநீறே கூலியாகக் கொடுக்கப்பட்டதால் திருநீற்று மதில் அல்லது நீறிட்டான் மதில் என்று வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்திலு<ள்ள தேவம்பாடிவலசு என்ற ஊரில் சிவன் பார்வதியுடன் கங்கையும் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் காட்சியைக் காணலாம். திருப்பெருந்துறை சிவன் கோயிலில் சண்டிகேஸ்வரருக்கு சன்னதி கிடையாது. இங்கு சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு சண்டிகேசுவரர் பதவியைக் கொடுத்ததால் இங்கு தனிச் சன்னதி கிடையாது.
ஆரணிக்கு அருகே உள்ள தேவிகாபுரம் கனகபுரீஸ்வரர் கோயிலில் உள்ள கருவறையில் 3 லிங்கங்கள் உள்ளன. சுயம்பு லிங்கம் கனகபுரீஸ்வரர்; அன்னை பெரியநாயகி பூஜை செய்த லிங்கம் காசிவிஸ்வநாதர்; மூன்றாவது ருத்திராட்ச லிங்கம். கேரள மாநிலம் திருச்சூரில் வடக்கு நாதர்சுவாமி கோயிலில் சிவன் நெய் மலையாக காட்சி தருகிறார். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது. மகாராஷ்டிரா மாநிலம் எல்லோரா குகைகளுக்கு அடுத்துள்ள குஸ்மேசம் என்ற ஊரில் உள்ள சிவலிங்கம் குங்குமத்தால் ஆனது. ஸ்ரீசைலத்தில் பிராகாரத்தில் ஒரே சன்னதியில் 5 லிங்கங்களும் 5 நந்திகளும் உள்ளன.