வைணவ மரபில் கருடனை பெரிய திருவடி என்றும். அனுமனை சிறிய திருவடி எனவும் அழைப்பர். மூவுலக உயிர்கள் அனைத்தையும் தன்னுள் எப்போதும் தாங்கியிருப்பவர், மகாவிஷ்ணு. அவரை எப்போதும் சுமந்து கொண்டிருப்பவர், கருடன் அதனால், கருடன் பெரிய திருவடியானார். பகவான் ராம அவதாரம் எடுத்தபோது மட்டும் அவரை சுமக்கும் பேறு அனுமனுக்குக் கிடைத்தது. எனவே அவரை சிறிய திருவடி என அழைக்கின்றனர். பெரிய திருவடியாகிய கருடனில் மகாவிஷ்ணு வலம் வருவது உலகினைக் காத்திட என்ற ஐதிகம் இருப்பதால்தான் கருட சேவை முக்கியமானதாகச் சொல்லப்படுகிறது. ராமபிரானின் தடைகள் யாவும் தகர்ந்திடத் துணை நின்றவர் ஹனுமன் என்பதால், சிறிய திருவடியில் அவர் எழுந்தருள்வதை தரிசிப்பது, வாழ்வில் வரும் தடைகளைக் கடந்து வெற்றிபெறச் செய்யும் என்பது நம்பிக்கை.