கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அம்மன் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சர்வசித்தி பஞ்சமுக விநாயகர் கோவிலின் கும்பாபிஷேகம் நடந்தது.கிருஷ்ணகிரி அம்மன் நகரில் உள்ளது பிரசித்தி பெற்ற சர்வசித்தி பஞ்சமுக விநாயகர் கோயில். இந்த கோயில் புனரமைக்கப்பட்டு இதன் கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி கடந்த 19ம் தேதி இரவு சங்கல்பம் மஹா கணபதி பூஜை, புண்ணியாக வசனம், வாஸ்து பூஜை, நவ கும்ப ஆராதனை, மங்களார்த்தி தீர்த்த பிரசாதம் விநியோகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை கணபதி பூஜை, மஹா பூர்ணா ஹீதி நடந்தது. காலை 10 மணிக்கு கடக லக்கனத்தில் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை திப்பையாச்சாரியர் குழுவினர் நடத்தி வைத்தனர். பகல் 12 மணிக்கு மஹா நெய்வேத்யம் பிரசாத விநியோகம் நடந்தது. பகல் 1 மணிக்கு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளை தலைவர் நாராயணமூர்த்தி, செயலாளர் சுந்தரேசன், பொருளாளர் கணேசன் மற்றும் பத்மாவதி செல்லப்பன், பிரேமாவதி வடிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.