செம்பை பார்த்தசாரதி கோவில் ஏகாதசி சங்கீத உற்சவம் நிறைவு!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2015 10:03
பாலக்காடு: கேரளா பாலக்காடு செம்பை ஏகாதசி சங்கீத உற்சவம் நிறைவு அடைந்தது. செம்பை பார்த்தசாரதி கோவில் ஏகாதசி சங்கீத உற்சவம் பிப்., 27ல் துவங்கியது. உற்சவத்தின் இறுதி நாளான நேற்று காலை, பஞ்சரத்ன கீர்த்தனை நடந்தது. டி.வி.கோபாலகிருஷ்ணன், மாதங்கி ருத்ரகுமார், அனன்யா பிரகாஷ் பாடினர்.மாலையில், செம்பை வைத்தியநாத பாகவதரின் பேத்தி புவனா ராமசுப்பு, விஜய் ஜேசுதாஸ், ஜெயன் உள்ளிட்டோர் பாடினர். ராமநாதனின் சாக்ஸபோன் நிகழ்ச்சி நடந்தது. வைத்தியநாத பாகவதரின் சீடரும் கர்நாடக இசைக் கலைஞருமான ஜேசுதாஸ் கச்சேரியுடன் சங்கீத உற்சவம் நிறைவு அடைந்தது.