பதிவு செய்த நாள்
22
ஜூன்
2011
10:06
களக்காடு : களக்காடு அருகேயுள்ள பத்மநேரி, சவளைக்காரன்குளம் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. களக்காடு அருகேயுள்ள பத்மநேரி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயில் 60 ஆண்டாக திருப்பணிகள் எதுவும் நடைபெறாமல் பாழடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து பக்தர்கள் பேரவை சார்பில் திருப்பணிகள் துவங்கியது. திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 17ம் தேதி கும்பாபிஷேக விழா துவங்கியது. தினமும் யாகசாலை பூஜைகள் உட்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் காலை விக்னேஸ்வர பூஜை உட்பட 4வது கால யாகசாலை பூஜைகள் நடந்தது. காலை 11.15 மணிக்கு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் சன்னதி விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பின் அன்னதானமும், மாலையில் திருக்கல்யாண விழாவும் நடந்தது. விழாவில் அமைச்சர் இசக்கி சுப்பையா, முன்னாள் எம்எல்ஏக்கள் வசந்தகுமார், சக்திவேல்முருகன், யூனியன் சேர்மன் தமிழ்செல்வன், டவுன் பஞ்., தலைவர் முத்துகிருஷ்ணன், ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெயராமன், முன்னாள் ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, வேல்பாண்டியன், தியாகராஜன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராஜேந்திரன், பேரவை பொருளாளர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். களக்காடு அருகேயுள்ள சவளைக்காரன்குளம் முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. வாஸ்துஹோமம், நவக்கிரக பூஜை, யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து முனீஸ்வரருக்கும், விமானத்திற்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி நம்பிராஜன் செய்திருந்தார்.