ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த மையனூரில் மலை மீதுள்ள கருடாழ்வார் கோவிலில் திருவரங்கம் ரங்க நாதருக்கு மாசி மக உற்சவம் நேற்று நடத்தப்பட்டது. மாசி மகத்தன்று திருவரங்கம் வைகுண்ட ரங்கநாதருக்கு மையனூரில் உள்ள கருட நதியில் தீர்த்தவாரி நடக்கிறது. நேற்று மாசி மகத்தைöாட்டி திருவரங்கம் வைகுண்ட ரங்கநாதர் உற்சவர் சிலை பல்லக்கில் அமர்த்தி நேற்று காலை 10:00 மணிக்கு மலைமீதுள்ள கருடாழ்வார் கோவிலுக்கு கொண்டு சென்றனர். அங்கு கருடாழ்வாருக்கும், அரங்கநாதருக்கும் கருட நதியில் தீர்த்தவாரி உற்சவம் நடத்தப்பட்டது. பகல் 1:00 மணியளவில் சிறப்பு அபிஷேகங்கள்நடந்தது. அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் ராமலிங்கம் கலந்து கொண்டனர். எஸ்.எஸ்.ஐ., ரவி தலைமையிலான பகண்டை கூட்ரோடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.