புவனகிரி : புவனகிரி அருகே மேல்புவனகிரி திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேல்புவனகிரி திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி விழா கடந்த மே மாதம் 13ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் (20ம் தேதி) மாலை நடந்த தீமிதி திருவிழாவில் பக்தர்கள் விரதமிருந்து மஞ்சள் ஆடை அணிந்து தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.