பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் மாரியம்மன் கோவிலில் தேர்திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. விழாவை முன்னிட்டு யொட்டி கடந்த 5ம் தேதி பூச்சொரிதலுடன் விழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து 12ம் தேதி காப்பு கட்டுதல் நடந்தது. 17ம் தேதி மற்றும்18ம் தேதிகளில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வந்தது. 19ம் தேதி மாவிளக்கு பூஜையும், 20ம் தேதி பொங்கல் விழாவும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா நேற்று நடந்தது. விழாவில் செங்குணம், அருமடல், பாலம்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்று 22ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா முடிவடைகிறது.