ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே பெருவயல் ரணபலி முருகன் கோயில் மாசி உற்சவம் பிப்., 20 ல் துவங்கியது. தினமும் மாலை அன்னம், மேஷம், யானை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி எழுந்தருளினார். பத்தாம் நாளான நேற்று காலை 10.50 மணிக்கு தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். முக்கிய வீதிகளில் வலர் வந்த தேர், பின்னர் நிலையை அடைந்தது. இன்று காலை 9 மணிக்கு மேல் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகிகள் செய்தனர்.