பரமக்குடி : பரமக்குடி சக்திக்குமரன் செந்தில் கோயிலில் மாசிமகத்திருவிழா, மார்ச் 2 ல் துவங்கியது. நேற்று காலை 7 மணிக்கு பெருமாள் கோடில் படித்துறை வைகை ஆற்றில் இருந்து, பக்தர்களின் பால்குட ஊர்வலம் புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அடைந்தது. மாலை 6 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் செந்திலாண்டவர் வீதியுலா வந்தார்.