காஞ்சிபுரம்: மாசி மக மண்டப்படி உற்சவம், நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஏலவார்குழலியுடன், ஏகாம்பரநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை 9:00 மணியளவில் கோவிலில் இருந்து ஏலவார்குழலியுடன் ஏகாம்பரநாதர் புறப்பட்டு, அமரேஸ்வரர் கோவிலை மதியம், 1:00 மணியளவில் வந்தடைந்தார். அங்கு, மண்டப்படி உற்சவம் நடைபெற்றது. மாலை 5:00 மணியளவில் ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்பாளுக்கு திருமஞ்சனமும் இரவு 8:00 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இரவு 9:00 மணியளவில் அமரேஸ்வரர் கோவிலில் இருந்து ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி திருக்கோவிலுக்கு புறப்பட்டு சென்றார்.