காளாத்தீஸ்வரர் தேரோட்டம்: பக்தர்கள் வடம் இழுத்தனர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2015 12:03
உத்தமபாளையம் : உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. காலை காளாத்தீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. காலை 9.50 மணிக்கு பக்தர்கள் தேரின் வடத்தை பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நிலையடைந்தது. அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. முன்னதாக ஜமாத் தலைவர் தர்வேஷ் முகைதீனுக்கு கோயில் சார்பில் மாலையணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அனைத்து சமுதாய ஒருங்கிணைப்பு சங்க தலைவர் ராஜேந்திரன், காளாத்தீஸ்வரர் சேவா அறக்கட்டளை தலைவர் முருகன், பேரூராட்சி தலைவர் ஷகிலாபானு, ஓம் நமோ நாராயாண பக்த சபை தலைவர் அய்யப்பன், இந்து ஆன்மிக நற்பணி மன்ற தலைவர் துரைப்பாண்டி, முன்னாள் அறங்காவலர் அய்யம்பெருமாள், தனலட்சுமி ஜூவல்லர்ஸ் பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.காளாத்தீஸ்வரர் சேவா அறக்கட்டளை சார்பில் இன்று பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது.