புதுச்சேரி : பிள்ளைச்சாவடி சீரடி சாயிபாபா சமுதாய பிரார்த்தனை மண்டப 9ம் ஆண்டு விழாவையொட்டி 108 கலசாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று முன் தினம் மாலை 5 மணிக்கு பூர்வாங்க பூஜை, சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை மற்றும் 108 கலச பூஜை நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு கொடியேற்றம், தீபாராதனை, கலச புறப்பாடு மற்றும் 108 கலச சிறப்பு அபிஷேகம் நடந்தது. 9 மணிக்கு கடலூர் நந்தகுமார் குழுவினரின் சாயி பஜன்ஸ், 11.30 மணிக்கு சாயி பாபா பல்லக்கு உற்சவம், 12 மணிக்கு ஆரத்தி, அன்னதானம் நடந்தது. மாலை 6.30 மணிக்கு காலாப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் சங்கீத சலங்கை நாட்டியாலயா பள்ளி மாணவர்களின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை சேவா சமிதி டிரஸ்ட் மற்றும் சேவா சமிதி விழாக்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.