விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தொரவி துர்க்கையம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது. தொரவியில் உள்ள பொறைய õத்தம்மன் கோவிலில் வீற்றிருக்கும் துர்க்கையம்மன், சப்த கன்னிகளுக்கு பவுர்ணமி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. துர்க்கையம்மன் , சப்த கன்னிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர் . பூஜை ஏற்பாடுகளை சரவணன் முன்னின்று செய்தார். சிவனடியார்கள் விஜயலட்சுமி, ரேவதி, தமிழரசி, அய்யனார் பூஜைகளை முன்னின்று செய்திருந்தனர்.