பழநி பங்குனி உத்திர விழா: வரும் 28ம் தேதி கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2015 12:03
பழநி: புகழ்பெற்ற பழநி பங்குனி உத்திர விழா, வரும் 28ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கி, ஏப்., 6ம் தேதி வரை நடக்கிறது. முதல்நாள் பெரியநாயகியம்மன் கோவிலில் இருந்து, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை, திருஆவினன்குடி கோவிலுக்கு எழுந்தருளுகின்றனர். விழாவின் ஆறாம் நாள், (ஏப்., 2) இரவு 7:00 மணிக்கு மேல் திருக்கல்யாணம், இரவு 9:00 மணிக்கு, வெள்ளி தேரோட்டம் நடக்கிறது. ஏழாம் நாள், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மலைக்கோவில், அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெறும். மாலை 4:35 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.