Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பணியாளர்களிடம் கவனம்! நம்பிக்கையில் நிலைத்திருங்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தெய்வீக சக்தி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2015
04:03

நன்னிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் மரகதலிங்கம் ஒன்றைப் பூஜித்து வந்தார். சில சூழ்நிலைகளால் அவரால் தொடர்ந்து பூஜை செய்ய இயலவில்லை. எனவே, நெல்லுõரில் முகாமிட்டிருந்த காஞ்சி மகாபெரியவரிடம் சென்று, தனது சூழ்நிலையைச் சொல்லிஒப்படைத்து விட்டார். பெரியவர் நெல்லுõரில் வசித்த அல்லாடிவாசுதேவன், அல்லாடி கிருஷ்ணய்யாஎன்பவர்களை அழைத்தார்.நீங்கள் உங்கள் வீட்டிற்கு இந்த லிங்கத்தை எடுத்துச் செல்லுங்கள். ஒரு வேத விற்பன்னரைக் கொண்டு பூஜை செய்து வாருங்கள். நான் கேட்கும் போது என்னிடமோ அல்லது நான் குறிப்பிடும் நபரிடமோஇதை ஒப்படைத்து விடுங்கள், என்று உத்தரவிட்டார்.இருவரும் அதைப் பெற்றுக் கொண்டனர். பெரியவர் சொன்னபடியே மரகத லிங்கத்திற்கு பூஜை சிறப்பாக நடந்து வந்தது.இந்நிலையில், பெரியவரிடம் லிங்கத்தைஒப்படைத்த பக்தரின் வீட்டில் பல சிரமமான சூழ்நிலைகள் ஏற்பட்டன. அவர்களும்ஜோதிடம், இன்னும் பல வகைகளில் இதற்கான காரணத்தை அறிய முற்பட்ட போது, லிங்கத்தை வீட்டை விட்டு வெளியேற்றியது தான்சிரமங்களுக்கு காரணம் என தெரிய வந்தது.அந்த சமயத்தில் பெரியவர், கர்நாடக மாநிலம் சகாபாத்தில் முகாமிட்டிருந்தார். அங்கு சென்று பெரியவரை நமஸ்கரித்து தங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட நிலையை விவரித்து, லிங்கத்தை மீண்டும் பெறச் சென்றார்.பெரியவரிடம் இதுபற்றிய தகவலைச் சொல்லவே, அவரும் அதை ஏற்று தன் சிஷ்யர் சந்திரமவுலியை, அல்லாடி குடும்பத்தினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். சிஷ்யரும் அங்கு சென்று மரகதலிங்கத்தைப் பெற்று பெரியவரிடம் ஒப்படைத்தார். பெரியவர் அந்த லிங்கத்தை வணங்கினார். நன்னிலம் சென்று பக்தரிடம்ஒப்படைத்து வர உத்தரவிட்டார்.அந்த லிங்கத்தைப் பெற்றுக்கொண்டதும், அந்தக் குடும்பத்தில்சிரமங்கள் படிப்படியாக தீர்ந்தது. எந்த ஒரு மனிதருக்கும் வாழ்வில் சிரமங்கள் வாழ்வில் தவிர்க்க முடியாதவை. அவை ஏதோ ஒரு ரூபத்தில் வருகின்றன. அதற்கு பல காரணங்களை நமக்கு நாமே கற்பித்துக் கொள்கிறோம். அந்தக் குறைகளை மகான்களிடம் தெரிவித்தால் போதும். அவற்றை அவர்கள் தீர்த்து விடுகிறார்கள். அப்படி ஒரு தெய்வீக சக்தி அவர்களிடம் இருக்கிறது. வாழும் தெய்வமான காஞ்சிப்பெரியவரை பிரார்த்திப்பவர்களுக்கு, சிரமங்கள் நீங்கி எல்லா வளமும் நலமும் கிடைக்கும். (மகான் காஞ்சிப் பெரியவர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar