இலங்கையில் உள்ள முக்கிய நகரம் நுவரெலியா. இது ராமாயணத்தில் வரும் சீதாப்பிராட்டியுடன் தொடர்புடையது. நு ராலர் என்ற சிங்களச் சொல்லுக்கு அணையாத நெருப்பு என்று பொருள். அன்று அனுமன் வைத்த நெருப்பு இன்னும் அணையாமல் எரிவதாக நினைத்து நம்பி, இம்மலைக்கு நுவரெலியா என்று பெயர் சூட்டியுள்ளார்கள். இந்த மலையிலுள்ள மண்ணின் நிறம் கூட கருப்பு. இங்கு சீதாப்பிராட்டிக்கு கோயில் ஒன்றும் உள்ளது.