பெருமாள் கோயில்களில் மூலவருக்கு எதிரே தான் கருடாழ்வார் இருப்பார். ஆனால் தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில் உள்ள மகரநெடுங்குழைக்காதன் கோயிலில், உள்ள மகரநெடுங்குழைக்காதன் கோயிலில், கருடாழ்வார் இடப்புறமாக விலகியிருக்கிறார். வேதம் ஓதியபடி தன்னை வணங்கவரும் பக்தர்களைக் கண்டு அருள் செய்யவும், ஓடி விளையாடும் குழந்தைகளின் மகிழ்ச்சியை பார்க்கவும் பெருமாள் கருடாழ்வாரை விலகி இருக்கும்படி கூறினாராம். எனவே, இங்கு கருடாழ்வார் விலகியிருக்கிறார். நம்மாழ்வாரும் விலகிய கருடாழ்வார் குறித்து தனது பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார். நவதிருப்பதி தலங்களில் சுக்கிர தலம் இது.