புதுடில்லி: காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை மேற்கொள்வோருக்கு, மொபைல்போனில் தொடர்பு கொள்ள பி.எஸ்.என்.எல்., நிறுவனம் வசதி செய்து கொடுத்துள்ளது. அமர்நாத்தில் பனி லிங்கத்தை தரிசிக்க, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டு, மூன்று லட்சம் பேர் யாத்திரை மேற்கொள்ள உள்ளனர். வரும் 29ல் துவங்கி, ஆகஸ்ட் 13 வரை யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரிகர்களுக்கு வசதியாக பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தொலைத் தொடர்பு வசதிகளை செய்து கொடுத்துள்ளது. "இந்த தொலைத் தொடர்பு வசதி இடைவிடாமல் கிடைக்கும் என, பி.எஸ்.என்.எல்., தலைமை நிர்வாகி ஆர்.கே.உபாத்யாயா தெரிவித்துள்ளார்.