பதிவு செய்த நாள்
23
ஜூன்
2011
10:06
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்திற்கு புதிதாக பொருத்தப்பட்ட மணி செயல்படவில்லை. கோயில் கம்பத்தடி மண்டபம் அனுக்ஞை விநாயகர் சன்னதி அருகே மணிக்கூண்டு உள்ளது. அங்குள்ள வெங்கல மணி, தினம் அதிகாலை கோயில் நடை திறக்கும்போதும், அடுத்ததாக பூஜை நேரங்களான காலை திருவனந்தாள் 5.30 மணி, விலா பூஜை 8மணி, காலசந்தி 8.30 மணி, திருக் காலசந்தி 10.30மணி, உச்சிகாலம் பகல் 12, சாயரட்சை மாலை 5.30, அர்த்தசாமம் இரவு 8.30 மற்றும் பள்ளியறை 9 மணிக்கு கோயில் மணி ஒலிக்கப்படும். ஏற்கனவே பல ஆண்டுகளாக ஒலித்த மணிக்கு பதிலாக, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஜூன் 6ல் 22 கிலோ எடையில், கோயில் நிதி 3.75 லட்சம் ரூபாயில் புதிய வெங்கல மணி செய்து பொறுத்தப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்து மூன்று தினங்கள் மட்டுமே கோயில் மணி ஒலித்தது. கோயில் மணி ஒசை கேட்காமல், பக்தர்கள் வேதனை அடைக்கின்றனர். மீண்டும் மணி ஒலிக்க நடவடிக்கை தேவை. கோயில் துணை கமிஷனர் செந்தில் வேலவன் கூறுகையில்,""மணியில் பழுது இல்லை. முன்பிருந்த மணியின் அச்சு 70 ஆண்டுகளுக்கு முந்தியது. அதற்கு பதிலாக பாதுகாப்பான தரமான புதிய உருக்கு அச்சு தயாரிக்கப்படுகிறது. சில நாட்களில் அது பொருத்தப்பட்டு, கோயில் மணி மீண்டும் ஒலிக்கும் என்றார்.