சிவகங்கை : நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயில் உண்டியலில் ரூ.3.45 லட்சம், தங்கம், வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இக்கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு 10 நாள் திருவிழா நடந்தது. வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. ரூ.3.45 லட்சம்:உண்டியலில் 3 லட்சத்து 45 ஆயிரத்து 945 ரூபாய், மோதிரம், தாலி, தோடு என 44 கிராம் தங்கம், 330 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தன. அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராஜமாணிக்கம் தலைமையில், தேவஸ்தான மேலாளர் இளங்கோ, ஆய்வாளர் மாரியப்பன், கோயில் கண்காணிப்பாளர் சரவணகணேசன் ஆகியோர் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.