பதிவு செய்த நாள்
23
ஜூன்
2011
11:06
வேலாயுதம்பாளையம்: புன்செய் புகளூர் நல்லியாம்பாளையம் கோட்டக்காடு முனியப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி வழிப்பட்டனர். பிரசித்தி முனியப்ப சுவாமி, கருப்பண்ண சுவாமி, பாம்பாட்டி சித்தர், குதிரை அனைத்துக்கும் புதியதாக மண்சிலைகள் செய்து கோயிலில் புனரமைப்பு செய்யப்பட்டது. இதற்கான கும்பாபிஷேக விழா கடந்த 20 ம் தேதி காலை 6 மணி முதல் 7 மணிக்கு விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. தொடந்து காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்தவரப்பட்டது. விநாயகர் வழிபாட்டுடன் புன்யாகம், யஜமானர் சங்கல்பம், வாஸ்து பூஜை, அங்குரம், பாலிகை பூஜை, காட்டுகட்டுதல், கும்பாலங்காரம், முதல்யாக பூஜை நடந்தது. இரண்டாம் கால யாக பூஜையும், மகா பூர்ணஹூதி, தீபாராதனை நடத்தப்பட்டு ஆகமப்ரவீனர் சந்திரசேகர் சிவாச்சாரியார் கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் சுப்பிரமணி, அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம், பொருளார் எஸ்.ராமலிங்கம் மற்றும் விழாக்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தம்பிதுரை எம்.பி., கரூர் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் கமலக்கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.