மேலூர் : மேலூர் அருகில் உள்ள செம்மினிபட்டியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மீன் பிடி திருவிழா நேற்று காலையில் நடைபெற் றது. செம்மினிபட்டி கண்மாய் அருகில் உள்ள ஆண்டி பாலர் முருகன் கோயிலில் பக்தர்கள் விவசாயம் செழிக்கவும், வாழ்வு வளம் பெறவும் வேண்டிக் கொள்வர். அதன் பிறகு கிராமம் சார்பில் கண்மாயில் விலைக்கு வாங்கிய மீன் குஞ்சுகளை விட்டு வளர்ப்பர். வளர்ந்த மீன்களை அருகில் உள்ள அனைத்து கிராம மக்களும் இலவசமாக பிடித்துக் கொள்ள நாள் குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். நேற்று காலையில் கொடியசைத்ததும் வலை, கூடை போன்றவைகளுடன் இறங்கி தங்கள் கைகளுக்கு சிக்கிய மீன்களை எடுத்துக் கொண்டு சென்றனர்.