கும்பகோணத்திற்கு அருகிலுள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் நான்கு முகங்களோடும், எட்டுக்கரங்களுடனும் அர்த்தநாரி உருவம் காணப்படுகிறது. இச்சிற்பம் அமைந்துள்ள மாடத்திற்கு மேல் அர்த்தநாரி சூரியன் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு அர்த்தநாரி வடிவில் சிவசூரியன் காட்சி தருவது சிறப்பு !.