Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராம தீர்த்தங்கள்! அதிசய வேம்பு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ராமன் எத்தனை ராமன்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2015
12:03

சரணாகதரட்சக ராமன்: தன்னை சரணடைந்த விபீஷணன், தன் எதிரி இராவணனின் தம்பியாக இருந்தாலும் தன்னை நம்பி வந்தடைந்ததால் அவனை அரவணைத்து ஆதரித்த ராமன்.

சேதுராமன்: வானர வீரர்கள் உதவியுடன் சேது சமுத்திரத்தைக் கடக்க பாலம் அமைத்து அதன்வழியாக லங்காபுரியை அடைந்த ராமன்.

கருணாகர ராமன்: நிராயுதபாணியாக நின்ற இராவணனை நல்ல வாய்ப்பாகக் கருதி உடனே கொல்லாமல், இன்று போய் நாளை வா என்று சொன்ன கருணை வள்ளலான ராமன்.

பவித்ர ராமன்: இந்திரனால் களங்கம் ஏற்பட்டு, அதன்காரணமாக சாபத்தினால் கல்லாக மாறிய அகலிகை ராமனின் திருப்பாதம் பட்டு பவித்ரமானாள். பாவப்பட்ட ரிஷிபத்தினியை புனிதவதியாக்கிய ராமன்.

உதாரண ராமன்: தந்தை தசரதன் சொல் காக்க, மனைவி சீதா மற்றும் தம்பி லட்சுமணனோடு கானகம் சென்று மானுடர்க்கெல்லாம் உதாரணமாகத் திகழ்ந்த ராமன்.

பிராதரு வத்ஸலராமன்: கானகம் தேடிவந்த தம்பி பரதனின் வேண்டுகோளையேற்று தன் பாதுகையை அளித்து, தான் வனவாசம் மேற்கொள்ள காரணமாக இருந்த சிற்றன்னையின் மகனாக இருந்தாலும் அந்த பரதனுக்கு பாசத்தை முழுமையாகக் காட்டிய ராமன்.

பராக்கிரம ராமன்: பஞ்சவடி-பர்ணசாலையில் தங்கியிருந்தபோது தம்மை எதிர்த்த கரன். தூஷணன், திரிசரன் ஆகிய அரக்கர்களையும் அவர்களது அசுரப்படைகளையும் மிகுந்த பராக்கிரமத்தோடு அடியோடு அழித்த ராமன்.

ஆனந்தராமன்:
மதங்கமுனிவரின் ஆசிரமத்தில், தன் வருகைக்காக பன்னிரண்டு வருடங்கள் காத்திருந்து தவமிருந்த சபரிக்கு அனுக்கிரகம் புரிந்து, பெருவாழ்வையும் பேரானந்தத்தையும் சபரிக்கு அளித்த ராமன்.

மோட்சபலபிரத ராமன்: சுக்ரீவனுக்குக் கொடுத்த வாக்குறுதிக்கேற்ப ராமபிரான் வாலியைக் கொல்ல, வாலியின் மார்பில் பாய்ந்த அம்பில் பொறித்துள்ள ராம எனும் மந்திரத்தை மனதால் நினைத்து, வாக்கால் உச்சரித்து, வாலிக்கு ராமநாமத்தாலேயே மோட்சம் அளித்த ராமன்.

தாரகநாம ராமன்:
ஜடாயுவின் அண்ணனான சம்பாதி. இராவணனால் இழந்த சிறகுகளை ராமநாம மகிமையில் மீண்டும் பெற்றார். சீதை இருக்கும் இடத்தை வானர வீரர்களுக்குத் தெரிவித்தார். இவ்வாறு தன் நாமத்தை தாரகமந்திரமாக உச்சரித்த எல்லாரும் உய்யும் மார்க்கத்தை அருளிய ராமன்.

துக்கநாச ராமன்
: அசோகவனத்தில் துக்கத்தில் துவண்டுகிடந்த சீதையிடம், ராமன் அளித்த கணையாழியை அனுமன் சமர்ப்பிக்க, அதைக்கண்ட சீதையின் துக்கமெல்லாம் தூசாகப் பறந்தது. இவ்வாறு அனைவருக்கும் துக்கம்போக்கும் ராமன்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar