Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேர்த் திருவிழா எதற்கு? முதல் நைவேத்தியம் !
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருச்சி ஸ்ரீநிவாசப் பெருமாள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2015
12:03

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து தெற்கே மூன்று கிலோ மீட்டர் தொலைவில், சாத்தனுõர் செல்லும் வழியில் இந்திரா நகர் அமைந்துள்ளது. இங்கு  அலர்மேல்மங்கை சமேதராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீநிவாசப் பெருமாள். கொடிமரம், பலிபீடத்தைக் கடந்து சென்றால் கருடாழ்வார், ஸ்ரீநிவாசப்பெருமாளை இரு கரம் கூப்பி வணங்கும் நிலையில் நின்று கொண்டிருக்கிறார். அவர் அருகில் நெய்விளக்கு ஏற்றி வழிபட, நம் குறைகளைச் சரிசெய்யும்படி பெருமாளுக்கு இவர் பரிந்துரை செய்வதாக நம்பிக்கை! சுமார் ஆறடி உயரத்தில் நின்ற நிலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீநிவாசப் பெருமாள், திருப்பதி திருமலையில் எப்படிக் காட்சி தருகிறாரோ அதே அம்சத்தில் அருள்புரிகிறார். இவருக்குச் சனிக்கிழமைகளில் கற்கண்டு சமர்ப்பித்து வழிபட, பிரச்னைகள் விலகி சகல பாக்கியங்களும் கிட்டும். பெருமாளின் இடப்புறம், தனிச் சன்னதியில் அலர்மேல்மங்கைத் தாயார் அருள்புரிகிறாள். தாயாரையும் பெருமாளையும் தரிசித்து திருச்சுற்று வலம் வரும்போது - லட்சுமி நரசிம்மர், லட்சுமி நாராயணர், லட்சுமி ஹயக்கிரீவர் ஆகியோரைத் தரிசிக்கலாம். பக்கத்தில் ஆதிசேஷன் சிறிய சன்னதியில் காட்சி தருகிறார்.

கிழக்குப் பார்த்த ஆழ்வார் மண்டபத்தில், பக்த ஆஞ்சநேயர் நின்ற நிலையில் கைகூப்பியவாறு தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார். இவருக்கு வலப்புறத்தில் சுவாமி தேசிகன்; அதற்கு அடுத்த சன்னதியில் சக்கரத்தாழ்வார் பதினாறு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் போல் புரட்டாசியில் பிரம்மோத்ஸவம் இந்தத் திருக்கோயிலில் நடைபெறுகிறது. மேலும் பங்குனி உத்திரத் திருக்கல்யாணம், வைகுண்ட ஏகாதசி திருநாள், பரமபத வாசல் திறப்பு, பகல் பத்து, ராப்பத்து உத்ஸவம், விசாக கருடசேவை உத்ஸவம் ஆகியவையும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar