திருச்சி அருகிலுள்ள மும்மூர்த்திகள் தலமான உத்தமர் கோயிலில், பிரம்மாவுக்குத் தனிச் சன்னதி உள்ளது. இதன் இடப்புறம் சரஸ்வதிக்கும் தனிச் சன்னதி உண்டு. இங்கு சரஸ்வதியை ஞான சரஸ்வதி என்பர். மஞ்சள் பொடியைப் பிரசாதமாக வழங்குகிறார்கள். பெரும்பாலான கோயில்களில் வீணையுடன் காட்சியளிக்கும் சரஸ்வதிதேவி, வேதாரண்யம், கங்கைகொண்ட சோழபுரம், திருக்கோடிக்கா ஆகிய தலங்களில் வீணை இல்லாமல் காட்சியளிக்கிறார். வேதங்களில் முக்கியமாகப் போற்றப்படும் சரஸ்வதி, யாகத்தைக் காப்பவள். அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றை அளிப்பவள். இனிய வாழ்க்கையைக் கொடுப்பவள். வீடுகளில் சரஸ்வதியை வழிபட்டால் இன்பம் பெருகும்.