Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பித்ரு சாபம் போக்குவோம்! ஆண்டவன், கடவுள், சுவாமி இவற்றுக்கு ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கீழிருப்பு சிதம்பரேஸ்வரர் !
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2015
12:03

மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில் 4 கி.மீ. துõரத்தில் கீழிருப்பு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்த பழமையான கோயிலாகும். ஒருசமயம் வியாபாரி ஒருவர் வணிகத்தலமான பூம்புகாருக்குச் சென்று அங்கிருந்து குதிரைகளை வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார். ஒரு காலத்தில் ஏனோ அவருக்குப் பொருளாசையே அற்றுப்போனது. முழு நேரமும் இறைப்பணியில் தன்னை ஈடுபடுத்தினார். சிவன் கோயிலிலேயே தங்கி திருத்தொண்டுகளைச் செய்து வந்தார். எனவே, இவரின் துõய திருப்பணியைக் கண்ட மக்கள் அவரைத் துறவியாக மதித்துப் போற்ற ஆரம்பித்தார்கள். இந்நிலையில் ஒரு நாள் மாலை வேளையில் சில வியாபாரிகள் கீழிருப்பு வழியாக மிளகு மூட்டைகளுடன் வண்டியில் பூம்புகார் நோக்கிப் பயணித்தார்கள். அப்போது திடீரென்று பெருமழை பிடித்துக்கொள்ள, அன்றிரவு மிளகு மூட்டைகளுடன் சென்று கோயிலுக்குள் வியாபாரிகள் தங்கினர். அப்போது, இறைவனுக்குப் நிவேதனம் செய்ய சிறிது மிளகு தேவைப்பட்டது துறவிக்கு. எனவே, அந்த வியாபாரிகளிடம் வேண்டி நின்றார். ஆனால், அவர்களுக்கோ தர மனம் இல்லை. எனவே, சுவாமி! இந்த மூட்டைகளில் மிளகு இல்லை, கடுகுதான் இருக்கிறது எனப் பொய் கூறினார்கள். துறவியும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மறுநாள் காலை மழை நின்ற பிறகு, வண்டியில் ஏற்றப்போன மூட்டைகளில் கடுகு இருப்பதைக் கண்ட வியாபாரிகள் அதிர்ந்து போனார்கள். உடன் துறவியிடம் வியாபாரிகள் வந்து தங்கள் தவறை மன்னித்து, பழையபடியே மிளகு மூட்டையாக மாற்றும்படி வேண்டிக்கொண்டார்கள். துறவிக்கோ, இறைவனின் இந்த லீலைமீது பெருத்த ஆச்சரியம்! அவர்கள்மேல் இரக்கம் கொண்ட துறவி அவர்களிடம், நீங்கள் உங்கள் தவறை சிதம்பரேஸ்வரரிடம் தெரிவித்து வேண்டுக் கொள்ளுங்கள். அவர் அருள் இருந்தால் மட்டுமே அவை மிளகாக மாறும் என்று கூற, அவர்களும் அப்படியே செய்தார்கள். அதன்படியே கடுகு மூட்டைகள் திரும்பவும் பழையபடியே மிளகு மூட்டைகளாக மாறின. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அந்தத் துறவியை, ஊர்மக்கள் மிளகுச் சித்தராகப் போற்றி வழிபடத் தொடங்கினார்கள். சிதம்பரேஸ்வரரைத் தவிர நந்திதேவர், விநாயகர், தண்டாயுதபாணி மற்றும் அம்பிகை சிவகாமி ஆகியோரும் அருள்பாலிக்கிறார்கள். வியாபாரத்திலுள்ள சிக்கல்கள் நீங்கி லாபம் பெருகிட, சிதம்பரேஸ்வரரிடம் வேண்டிக்கொண்டால் போதும். பிரச்னைகள் விலகி வியாபாரத்தில் சுமூகநிலை உண்டாகும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar