காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பால்குடம் ஊர்வலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2015 11:03
காரைக்குடி : காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி - பங்குனி விழா 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவங்கினர். ஒவ்வொரு நாளும் மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து வருகிறது. இன்று இரவு 7 மணிக்கு திருக்கோயில் கரகம், மதுக்குடம் முளைப்பாரி நிகழ்ச்சியும், நாளை காலை 9.30 மணிக்கு திருக்கோயில் காவடி முத்தாலம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு, முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும், பால் குட ஊர்வலமும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு திருக்கோயில் கரகம், மதுக்குடம் முளைப்பாரி புறப்பட்டு, பருப்பூரணி கரையில் விடப்படும். 19-ம் தேதி அம்மன் திருவீதி உலா, 20-ம் தேதி சந்தனகாப்பு அலங்காரம் நடக்கிறது. ஏப்ரல் 16-ம் தேதி விழா 40 நாள் நிறைவு பெறுகிறது.