பதிவு செய்த நாள்
17
மார்
2015
11:03
புதுச்சேரி: சுப்பையா நகர், அங்காளம்மன் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள சிங்க வாகன கரிகோல ஊர்வலம் நடந்தது. தட்டாஞ்சாவடி, சு ப்பையா நகர், அங்காள பரமேஸ்வரி கோவிலில், 4ம் ஆண்டு மயான கொள்ளை உற்சவம் இன்று (17 ம் தேதி) விக்னேஸ்வர பூஜையுடன் துவ ங்குகிறது. நாளை (18 ம் தேதி), கணபதி ஹோமம், கோ பூஜை, அம்மனுக்கு மகா அபிஷேகம், கொடியேற்றுதல் நடக்கிறது. 19ம் தேதி, அம்மனுக்கு குங்கும அபிஷேகமும், 20ம் தேதி மாலை 6:00 மணிக்கு, மயான கொள்ளை உற்சவம் நடக்கிறது. இந்நிலையில், அம்மன் வீதி உலா செல்ல, 1 லட்சம் ரூபாய் செலவில், 5 அடி உயரத்தில் செய்யப்பட்டுள்ள புதிய சிங்க வாகனத்திற்கு நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கரிகே ால ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.