ஆனைமலை: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அங்கலக்குறிச்சி ஆத்மநாபவனத்தில் அமைந்துள்ள கால சம்ஹார மூர்த்தி பைரவர் மற்றும் சமுத்தியாம்பிகை கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பொள்ளாச்சி அடுத்துள்ள அங்கலக்குறிச்சி அருகே கோபால்சாமி மலையடிவாரத்தில். கால சம்ஹார மூர்த்தி பைரவர் கோவிலில் உள்ளது. இங்கு மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு கொண்டாடப்படும். இந்த மாதம் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது. இதையொட்டி கால சம்ஹார மூர்த்தி பைரவருக்கும் சமுத்தியாம்பிகைக்கும் கோமாதா பூஜை நடந்தது. பின்னர் சுவாமிக்கு மஞ்சள், குங்குமம், பால், பன்னீர், தேன், வாழைப்பழம், அரிசி மாவு, சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காலசம்ஹார மூர்த்தி பைரவர் மற்றும் சமுத்தியாம்பிக்கை பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெண்கள் சிறப்பு வழிபாடு: இவ்வழிபாட்டில் பங்கேற்ற பெண்கள், சுவாமிக்கு பூசணிதீபம், நெய் தீபம் ஏற்றியும், கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தனர். சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.