முள்ளாச்சி மாரியம்மன் கோவில் தீ மிதிவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2015 11:03
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி முள்ளாச்சி மாரியம்மன் கோவில் நேற்று முன் தினம் நடந்த 71 வது ஆண்டு தீ மிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் குழந்தைகளுடன் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி முள்ளாச்சி மாரியம்மன் கோவி லில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் தீமிதி உற்சவம் மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு 71 வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு கடந்த 1ம் தேதி இரவு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியில் சுற்றுப்பகுதியினர் காப்புக்கட்டிக் கொண்டனர். கடந்த 2 ம்தேதியில் இருந்து 14ம் தேதி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள், வீதியுலா மற்றும் ரிஷப வாகன காட்சியும் நடந்தது. நேற்று முன் தினம் மாலை பக்தர்கள் பால்குடம் சுமர்ந்து வந்து 6.00 மணியில் இரு ந்து இரவு 9.00 மணி வரை நடந்த தீ மிதி உற்சவத்தில் பக்தர்கள் குழந் தைக ளுடன் ஆயிரக்கணக்கானவர்கள் தீ மிதி த்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். உலக ரட்சகர் சாய்ராம் அறக்கட்டளை சார்பில் கருணாநிதி தலைமையில் நட ந்த மருத்துவ முகாமில் டாக்டர்கள் பிரபு, மன்னர்மன்னன் உள்ளிட்ட சுகா தாரத்துறையினர் மருத்துவ முகாம் நடத்தினர்.