கோவை : உப்பிலிபாளையம் பத்திரகாளியம்மன் கோவிலில், சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. விழா நிறைவையொட்டி, நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து, 108 கலசங்களில், உள்ள நீரை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதேபோல், கோவை வடவள்ளியில் உள்ள கருப்பராயன் கோவிலிலும், 108 சங்காபிஷேக விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கடவுள் அருள் பெற்றனர்.