பதிவு செய்த நாள்
17
மார்
2015
11:03
திருவண்ணாமலை: ஆரணி காளியம்மன் கோவிலில், அம்மன் மீது, பாம்பு படமெடுத்த ஆடியதால், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு வழிபட்டனர். ஆரணி, வி.ஏ.கே., நகர், காளியம்மன் கோவில் அருகில், சில நாட்களுக்கு முன், திடீரென புற்று ஒன்று உருவாகி, தினமும் வளர்ந்து கொண்டு வருகிறது. புற்றுக்கு பக்தர்கள், மஞ்சள், குங்குமம் வைத்து வணங்கி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கோவிலில் பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது, புற்றிலிருந்த நாகப்பாம்பு ஒன்று வெளியே வந்து, கோவில் உள்ளே சென்றது.பின்னர், காளியம்மன் சிலை மீது ஏறி படமெடுத்து நின்றது. இதை பார்த்த பக்தர்கள் மெய்சிலிர்த்து அந்த பாம்பை வணங்கினர். சில நிமிடம் கழித்து பாம்பு மீண்டும் புற்றின் உள்ளே சென்றது. இதேபோன்று நேற்றும், அம்மன் மீது பாம்பு படமெடுத்து ஆடியது. இதனால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்து, புற்றுக்கு பால் ஊற்றி காளியம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர்.