மயிலம்: விளங்கம்பாடி அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது. மயிலம் அடுத்த விளங்கம்பாடி சமயபுரம் மாரியம்மன் நகரிலுள்ள அங்காளம்மன் கோவில் மாயனக் கொள்ளை உற்சவம் கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன் தினம் காலை 6 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தது. 9 மணிக்கு குளக்கரையிலிருந்து பூங்கரகம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவில் வளாகத்தை அடைந்தது. பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கினர். மாலை மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது. இரவு 7 மணிக்கு பாவடைராயனுக்கு கும்பம் படைத்தல் நடந்தது. ஏற்பாடுகளை ஆலய பூசாரி அரிதாஸ் செய்திருந்தார்.