பதிவு செய்த நாள்
18
மார்
2015
11:03
சென்னை: தமிழக கோவில்களில் மட்டும் தான், இலக்கியங்களும் ஓவியங்களாக திகழ்கின்றன, என, முனைவர் அன்னா லிசே சீஸ்டரன் தெரிவித்தார். டில்லியில் உள்ள, சிகாகோ பல்கலைக்கழக கிளையும், சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நுாலகமும் இணைந்து, பழங்கால கோவில்களில் உள்ள ஓவியங்கள் குறித்த, ஒரு மறுபார்வைக்கான கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன. அதில், தமிழக கோவில்களில் உள்ள ஓவியங்கள் குறித்து, ஆய்வு செய்த, முனைவர் அன்னா லிசே சீஸ்டரன், பேசியதாவது: கடந்த, 2007ம் ஆண்டு, ஓவியங்கள் பற்றி ஆய்வு செய்ய, தமிழகம் வந்தேன். இரண்டு ஆண்டுகள் ஆராய்ச்சியில், தமிழக கோவில் ஓவியங்கள் குறித்து தெரிந்து கொண்டேன். பதினேழு மற்றும் பதினெட்டாம் நுாற்றாண்டுகளில் தான், தென் இந்திய கோவில்களில், ஓவியங்கள் அதிக அளவில் வரையப்பட்டிருக்கின்றன. அத்தனை ஓவியங்களும் இயற்கை ஓவியங்களாக இருப்பதால் தான், காலங்கடந்தும் நிலைத்திருக்கின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில், திருப்புடைமருதுார் கோவில் என, பல கோவில்களில் உள்ள சுவர் ஓவியங்கள், அதிசயத்தின் உச்சம். சுவர் ஓவியத்தில், கோவிலின் தல புராணங்கள், நாயன்மார் மற்றும் ஆழ்வார்கள் வரலாறுகளை அழகாக சித்தரித்துள்ளனர். அதேபோல், ÷ காவில் கோபுரத்தில் உள்ள சிற்பங்களும் தமிழரின் கலைத்திறனை எடுத்துரைக்கின்றன. தேவார, திருவாசகம், திவ்ய பிரபந்தம் என, இலக்கிய ங்களையும் ஓவியங்களாக, தமிழகக் கோவில்களில் தான் காண முடியும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.