பதிவு செய்த நாள்
18
மார்
2015
11:03
பொன்னேரி: பொன்னேரி ஆனந்தவல்லி அம்மை வலம்கொண்ட அகத்தீஸ்வரர் கோவிலில், 100 ஆண்டுகளுக்கு பின், வரும் 26ம் தேதி, கொடியே ற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்குகிறது. ஏப்., 7ம் தேதி வரை, தொடர்ந்து, 14 நாட்களுக்கு பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. வாகன ங்கள், தேர் உள்ளிட்டவைகள் உடைந்து போனதால், பிரம்மோற்சவ விழா நின்று போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத்தொடர், மானிய கோரிக்கையின்போது, இக்கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெற வேண்டும் என, பொன்னேரி எம்.எல்.ஏ., பொன்ராஜா வலியுறுத்தினார். மேலும், கொடிமரம், புதியாக தயார் செய்யப்பட்ட வாகனங்கள் உள்ள கோவில்களில், கட்டாயம் பிரம்மோற்சவம் நடைபெற ÷ வண்டும் என்பதால், தற்போது விழா நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவில், மார்ச் 26 முதல், ஏப்., 3ம் தேதி வரை, தினமும் காலை மற்றும் இரவு, பஞ்ச மூர்த்திகளின் வீதி உலாவும், ஏப்., 5 மற்றும் 6ம் தேதிகளில், விநாயகர், சந்திரசேகர் வீதி உலாவும் நடைபெறும்.