முகிலேஸ்வரன், பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2015 11:03
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகர் பாலமுருகன் கோவில் உட்புறத்தில் உள்ள முகிலேஸ்வரன், பெருமாள், கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு நிறைவு அபிஷேகம் நடந்தது. நேற்று முன் தினம் விக்னேஸ்வரர் பூஜை, புண்ணியாவாகனம், வாஸ்து பூஜை, கணபதி ÷ ஹாமம் முடிந்து அனைத்து சுவாமிகளுக்கும் ஹோமம் நடந்தது. காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை, கோ பூஜை, ரக்க்ஷாபந்தனம், தத்துவார்சனை, நாடி சந்தானம் முடிந்து மகா தீபாராதனை நடந்தது. காலை 9.30 மணிக்கு கடம் புறப்பட்டு மகா கும்பாபிஷேகம் குருக்கள் கிரி அய்யர் மூலம் நடந்தது. கோவில் நிர்வாகத்தினர் தனபால், ஜெயராமன், வெங்கட்ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.