திருவண்ணாமலை மாவட்டம், ஐயம்பாளையத்தில் மலை மீது அமைந்துள்ள உத்தமராய பெருமாள் கோயில் மிகப்பழமை வாயந்தது. பேச்சுக்குறைபாடு உள்ளவர்கள் இங்கு வந்து பெருமாளை வேண்டிக்கொள்ள, விரைவில் அக்குறை நீங்கும் என்பது நம்பிக்கை. பேச்சாளராகவும், பாடகராகவும் வர ஆசைப்படுவோர் இக்கோயில் அபிஷேகத் தேனை உட்கொண்டால், அவர்கள் எண்ணம் ஈடேறும் என்பது திண்ணம்.