வேதங்கள் நான்கு என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவை தவிர நான்கு உபவேதங்கள் இருக்கின்றன. இவை: 1.ஆயுர்வேதம்; உடலை நோய்களிலிருந்து காப்பாற்றி ஆயுளை அதிகரிக்கும் மருத்துவம். 2. தனுர் வேதம்: தற்காத்துக் கொள்ளும் போர்ப் பயிற்சிகளைக் கற்றுத் தருவது. 3. காந்தர்வ வேதம்: மனதிற்கு இன்பமூட்டும் இசை, நடிப்பு, நடனம் முதலியவை. 4. அர்த்த வேதம்: பொருள்களைச் சம்பாதிக்கும் உபாயங்களைத் தெரிவிப்பது.