ஒரு துறவியைச் சந்தித்த ஒருவன், சுவாமி! குரு என்பதன் பொருள் என்ன? என்று கேட்டான். கு என்றால் இருள்; ரு என்றால் போக்குபவர், குரு என்றால் மனிதர்களின் அக இருளை நீக்குபவர் என்பது பொருள். தங்களது ஞானத்தை உபதேச மொழிகளாக்கி மனிதகுலம் உயர்வடையச் செய்பவர்களே குரு! என்றார் துறவி.