சுகமாக வாழும் ஒருவனை, அவனுக்கென்ன! ஜம்முன்னு இருக்கான்! என்பார்கள். இப்படி சொல்வது ஏன் தெரியுமா?ஆலமரத்தடியில் தட்சிணாமூர்த்தி என்னும் பெயரில் தியானத்தில் ஆழ்ந்தார் சிவன். தட்சிணம் என்றால் தெற்கு. தெற்கு நோக்கி அமர்ந்த மூர்த்தி என்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. இவரை சம்பு என்றும் அழைப்பர்.சம் என்றால் நிலையான சுகம்.அமைதியை வெளியுலகில் யாரும் தேட வேண்டியது இல்லை. மவுனமாக கண்ணை மூடி அமர்ந்து தியானம் செய்தாலே போதும். அது கிடைத்துவிடும்.சம் என்பதே ஜம் என்று திரிந்து விட்டது.