தாயமங்கலத்தில் வாகன நெரிசல் தரிசிக்க வந்த பக்தர்கள் அவதி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2015 01:03
இளையான்குடி : தாயமங்கலம் கோயில் பங்குனித் திருவிழா அடுத்த வாரம் துவங்க உள்ள நிலையில் நேற்றே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சிறப்பு பஸ்கள் ரோட்டிலேயே நிறுத்தப்பட்டதால், பக்தர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர். ஒவ்வொரு ஆண்டும் அரசு போக்குவரத்து கழகத்தினர் , பங்குனி முதல் தேதியில் கோயிலின் மேற்கே உள்ள தனியார் இடத்தை வாடகைக்கு எடுத்து, அந்த இடத்தில் திருவிழா முடியும் வரை அரசு பஸ்களை நிறுத்துவர். நேற்று அரசு சிறப்பு பஸ்கள் அந்த இடத்தில் நிறுத்தாமல் கோயிலின் ஊரணி மேல்கரையில் இருந்து மேற்கே சாத்தமங்கலம் வரை ஒரு கி.மீ., தூரத்திற்கு பயணிகளை இறக்கிவிட்டு,மெயின் ரோட்டின் ஓரத்தில் நிறுத்தியதால் , மதுரை, மானாமதுரை, சிவகங்கை பகுதிகளில் வாகனங்களில் வந்தவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்பட்டனர். திருவிழா துவங்காத நிலையிலேயே கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அடுத்த வாரம் திருவிழா துவங்க உள்ள நிலையில் வாகன எண்ணிக்கை பல மடங்கு இருக்கும். அரசு போக்குவரத்துக் கழகத்தினர் ஏற்கனவே பஸ்களை நிறுத்திய தனியார் இடத்தை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் மாற்று ஏற்பாடாக சாத்தமங்கலம் கண்மாயில் பஸ்களை நிறுத்துவதற்கு அரசு போக்குவரத்துக் கழகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.