ராவணன் சீதையை அபகரித்து இலங்கைக்குச் சென்ற போது, வழியில் கண்ட கோதாவரி நதியைப் பார்த்தாள், அம்மா! கோதாவரி! நானும் உன்னைப் போல் ஒரு பெண். எனக்கு நேர்ந்த துன்பத்தை பார்த்துக் கொண்டிருக்கிறாயே! என்றாள். ராமனும் அவளைத் தேடும் போது, கோதாவரி நதியிடம் தாயே! அவளைப் பார்த்தாயா? என்று கேட்டார். ராவணன் மீதுள்ள பயத்தால், கோதாவரி நடந்ததைச் சொல்லவில்லை. நமக்கு சம்பந்தம் இல்லா விட்டாலும் கூட, அடுத்தவர்க்கு நன்மை தரும் விஷயத்தில் அமைதி காப்பது குற்றம். இதனால் ஏற்பட்ட பாவத்தை கலியுகத்தில் கோதாவரி போக்கிக் கொண்டாள். ஸ்ரீவில்லிபுத்துõரில் பிறந்த ஆண்டாளுக்குப் பெரியாழ்வார், கோதா என்று பெயரிட்டார். இதன் மூலம் எங்கேயோ இருக்கும் கோதாவரி நதியின் பாவம் தீர்ந்தது. கோதை என்று சொன்னாலும், கேட்டாலும் பாவம் தீரும் என்பது ஐதீகம்.