ராமநவமி விரதம் குறித்து காஞ்சிப்பெரியவர் கூறுவதாவது; இந்த விரதமிருக்க குறைந்த பட்ச வயது 20. சிறுவர்களுக்கு இந்த விரதம் கட்டாயமில்லை என்றாலும் கோயில் அல்லது பஜனை மடங்களில் ராமவழிபாடு செய்வதற்கு அறிவுறுத்த வேண்டும். ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம் என்னும் 13 எழுத்து மந்திரத்தை ஒருவர் முதலில் சொல்ல, மற்றவர்கள் தொடர்ந்து சொல்லியபடியே தெருக்களைச் சுற்ற வேண்டும். அன்று ராமர் கோயிலில் ராமாயணம் குறித்த கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். நவமிக்கு மறுநாள் காலையில், கோயிலில் மறுபூஜை செய்ய வேண்டும். அப்போது நாட்டிலுள்ள அனைவரும் பக்தி, ஒழுக்கமுடன் வாழவும் அருள் புரிவாயாக என மனதார கேட்க வேண்டும். பின், அன்னதானம் செய்ய வேண்டும்.