Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமனின் இன்னொரு அம்மா! நவமி பாடல்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உழைப்பால் உயர்ந்தவனை உலகமே போற்றி வணங்கும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2015
04:03

பெரிய மலை கூட, இருந்த இடம் தெரியாமல் மறையலாம். ஆனால், சத்தியம் ஒருநாளும் நிலை மாறாது. செல்வத்தை மனிதன் வரமாகக் கருதுகிறான். ஆனால், பணத்தால் மனத்துõய்மை குறையத் தொடங்குகிறது.எங்கும் பரவியிருக்கும் காற்றைக் கூடக் கட்டி விடலாம். ஆனால், மனதை கட்டுப்படுத்துவது எளிதானது அல்ல. கோபத்தால் மனிதன் பிறருக்கு செய்யும் தீமையை விட, தனக்கே அதிக தீங்கு செய்து கொள்கிறான். இளமையில் உழைத்தவன், முதுமையில் வளமோடு வாழ்வான். உழைப்பால் உயர்ந்தவனை உலகமே வணங்கிப் போற்றும். பிறருக்கு தீங்கு செய்யாதவர்கள், மீண்டும் மண்ணில் பிறப்பெடுத்து துன்பப்படத் தேவையிருக்காது. அநேகர் மனதில் ஆணவம் சிங்கம் போல அலைந்து திரிகிறது. இதை விட்டுவிட்டால் அமைதி குடி புகுந்து விடும். இளமையிலேயே நற்பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், முதுமையில் துன்பத்திற்கு ஆளாக நேரிடும். வீண் பேச்சில் ஈடுபடுபவன், தனக்குத் தானே பள்ளம் தோண்டிக் கொள்கிறான். தேவையற்ற நேரத்தில், மவுனமாக இருப்பது நல்லது.இன்ப, துன்பம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. இதில் ஒன்றை மட்டும் அடைய நினைப்பது அறியாமை.ஏழ்மையில் தவித்தாலும், நேர்மையுடன் வாழ்வதே பெருந்தன்மை. சுயமுயற்சியால் கிடைத்ததைக் கொண்டு மகிழ்ச்சி காண்பதே சிறந்தது.

பிறர் செய்யும் தீமையைக் கண்டு கொள்ளாமல் இருப்பவன், சமுதாயத்திற்கே தீங்கு செய்தவன் ஆவான்.முட்டாளோடு நட்பு கொள்ளக்கூடாது. அறிவாளியோடு உறவாடுவது கடினமானது என்றாலும், அதுவே நன்மை தரும்.கிடைத்ததைக் கொண்டு வாழ்க்கையைத் திறம்பட வாழ்வதே நிறைவான வாழ்க்கை. பேராசையை ஒழித்து விட்டவன் பதட்டப்பட தேவையிருக்காது. எப்போதும் இனிமையுடன் வாழலாம்.கேட்டதையெல்லாம் புத்திசாலி நம்புவதில்லை. சிந்தித்து உண்மையை அறியவே அவன் முயற்சி செய்வான். கல்வியறிவு இல்லாதவன் கூட, சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். இதற்கு தேவை முயற்சி தான்.சோம்பலை விட்டு உழைப்பவன், கஷ்ட காலத்திலும் ஒளி விளக்கு போல பலருக்கும் வழிகாட்டுவான்.பணத்தால் வரும் இன்பம் தற்காலிகமானது. மன திருப்தியால் உண்டாகும் இன்பமே வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்.  (மகான் வசிஷ்டர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar