Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமணத் தடை நீங்க! மதுரா சென்றால் மனம் நிறையும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
முப்புரம் எரித்த முதல்வன் !
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2015
02:03

சிவபெருமானுக்கு பல திருநாமங்கள் உண்டு. அவற்றில் திரிபுரம் எரித்தவர் அல்லது முப்புரம் எரித்தவர் என்ற பெயர் பிரசித்தம். வடமொழியில் த்ரிபுர ஸம்ஹாரி அல்லது புராரி என்று அழைப்பர். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அடிக்கடி போர் நடப்பது வழக்கம். ஒருமுறை தேவர்கள், அசுரர்களுக்குப் பயந்து ஓடி அக்னிக்குள் ஒளிந்து கொண்டனர். பின்பு அக்னியை தங்களது பாதுகாப்பு அரணாக அமைத்துக்கொண்டு அசுரர்களுடன் போர்புரிந்து வென்று வந்தனர். அசுரர்கள் தொடர்ந்து தோல்வியே அடைந்து வந்தனர். இதனால் அசுரர்கள் ஒன்றுகூடி ஆலோசித்தனர். தங்களுக்கும் ஒரு பாதுகாப்பு அரண் அமைத்துக்கொள்ள முடிவுசெய்து மூன்று புரங்களை (மூன்று கோட்டைகளை) அமைக்கத் திட்டமிட்டனர். அவைதான் திரிபுரம் ஆகும். மயன் என்ற சிற்பி இந்த மூன்று கோட்டைகளையும் கட்டிக் கொடுத்தான். ஒவ்வொரு கோட்டையையும் ஒரு பெரிய நகரம் போன்றது. இந்த மூன்று கோட்டைகளும் அடுத்தடுத்து  பக்கவாட்டில் அமையாமல், ஒன்றின்மேல் ஒன்றாக அமைந்திருந்தது. பூமிக்குக் கீழே இரும்புக் கோட்டையும், அதற்கு மேல் வெள்ளிக் கோட்டையும், அதற்குமேல் தங்கக்கோட்டையும் அமைந்திருந்தது. இந்த மூன்று கோட்டைக்குள் பாதுகாப்பாக இருந்துகொண்டு தேவர்களை எதிர்த்துப் போர் செய்தனர் அசுரர்கள். இப்போது தேவர்களால் அசுரர்களை வெல்ல முடியவில்லை.

தேவர்கள் ஒன்றுகூடி ஆலோசித்தனர். அசுரர்களுக்கு பெரிய பலமாக உள்ள அந்த மூன்று கோட்டைகளைத் தகர்க்க சக்திமிக்க தேவர்கள் அந்த அம்பின் அடிப்பாகமாக சோமனையும், நடுப்பாகமாக அக்னியையும். நுனிப்பாகமாக வலிமைமிக்க தனி வீரன் என்ற பெயரில் விஷ்ணுவையும் வைத்து அம்பை உருவாக்கினர். மேலும், போர்புரிய வில்லும் ரதமும் தயார் நிலையில் வைக்கப்பட்டது. சக்திமிக்க அந்த அம்பை எடுத்து வில்லில் பொருத்திப் பிரயோகம் செய்வது சிவபெருமான்தான் (ருத்ரன்) என்று முடிவுசெய்து தேவர்கள் அவரிடம் சென்று வேண்டினர். அதற்கு சிவபெருமான், நீங்கள் என்னைப் பசுக்களின் (சகல ஜீவராசிகள் - மனிதர்கள்) தலைவனாக்குவதாக வாக்களித்தால், அந்த அம்பை அசுரர்கள்மீது நான் பிரயோகம் செய்கிறேன் என்று கூற, தேவர்களும் அதற்குச் சம்மதித்தனர். இதனால் சிவபெருமானுக்கு பசுபதி என்று பெயர் வந்தது. பின்பு, சிவபெருமான் ரதத்தில் ஏறி அந்த சக்திமிக்க அம்பை வில்லில் பொருத்தி முப்புரக் கோட்டைகள் மீது பிரயோகம் செய்தார். இதனால் அக்கோட்டைகள் தீப்பற்றி எரிந்தன. அசுரர்கள் அழிந்தனர். உயிர்களைப் பற்றியிருக்கும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைச் சுட்டெரிப்பவன் சிவபெருமான் ஒருவனே என்னும் தத்துவத்தை விளக்குவதே இக்கதை, தைத்திரீய ஸம்ஹிதையில் இக்கதை உள்ளது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar