புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில் மிகவும் புகழ்பெற்ற அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து வழிபாடு நடைபெற்றது. மண்டகப்படி நாட்களில், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஸ்வாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். வரும், 3ம் தேதி பங்குனி உத்திரத்தன்று இரவு, 10 மணியளவில் ஸ்வாமி ஊர்வலமும், தெப்ப உற்சவமும் நடைபெறும்.