பதிவு செய்த நாள்
31
மார்
2015
12:03
கோவை : ஆர்.எஸ்.புரம் டி.வி.சாமி ரோட்டில் உள்ள, ஜகத்குரு ஜெயயேந்திர சரஸ்வதி அறக்கட்டளை வேதபாடசாலை சார்பில், வசந்த சிவராத்திரி உற்சவ விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு மாலை, 6:00 மணி அளவில் நடந்த அன்னபூரணிஸ்வரி வீதி உலாவை, வேத பாடசாலை செயலாளர் ரவிசாம் துவக்கி வைத்தார். வேத பாடசாலையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு, தடாகம் ரோடு, பெரியசாமி ரோடு, ஆசாத் ரோடு வழியாக வந்து மீண்டும் வேத பாடசலையை வந்தடைந்தது.ஊர்வலத்தில் ராமாயண கதாபாத்திரங்களை சித்தரிக்கும் தெருக்கூத்து, ஒயிலாட்டம், பறையாட்டம், புலியாட்டம், பொய்க்கால் ஆட்டம் என, 50க்கும் மேற்பட்ட நாட்டுப் புறக்கலைஞர்கள் பங்கேற்று நடனம் ஆடி பொதுமக்களை மகிழ்ச்சிப்படுத்தினர். ஊர்வலத்தில் 50க்கும் மேற்பட்ட வேத பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர். சாமி வீதி உலா நிகழ்ச்சியால், அப்பகுதி விழா கோலம் பூண்டிருந்தது.